நாங்கள் யார் ?
எங்களின் நோக்கம் என்ன ?

அன்று முதல் இன்று வரை

கடந்த 2017 முதல் இப்போது வரை தேவ கிருபையால் பல அரிய வரலாற்று தகவல்களை மக்களுக்கு எளிய முறையில் கொண்டு போய் சேர்த்து வருகிறோம். கடந்த வருடத்தில் தேவன் எங்களை அபரிவிதமாக உபயோகித்து வருகிறார் என்பதில் ஐயமில்லை.

வரலாற்றை ஆராய்வதில் கள ஆய்வுகள்
67%
நவீன தொழில் நுட்பம் மூலமாய் ஆராய்தல்
95%
அழியப்போகிற புத்தகங்களை பாதுகாத்தல்
86%

TESTIMONIALS

எங்களை பற்றிய ஆய்வாளர்கள், குருவானவர்கள், மக்களின் கருத்துக்கள்

மறைந்து போன வரலாறுகளை உண்மைத்தன்மையுடன் சிறப்பாக பகிர்ந்துகொள்கிறீர்கள். அனைவருக்கும் பயனுள்ளதாக உள்ளது. பாராட்டுக்கள்

Augustine Jeevakani Presbyter - CSI

இதுவரை செய்த மகத்தான செயல்களுக்காக சந்தோஷப்படுவதோடு எதிர்வரும் நாட்களில் செய்ய நினைத்துள்ள சாதனைகளை எண்ணி எண்ணி அவைகளை சாதித்து வெற்றிகளை மறவாமல் பட்டியலிடுங்கள். வெற்றி உங்களை தேடி வரும்

ஜே.பர்னபாஸ் - சேலம் வரலாற்று சங்கம்

மறைந்து மங்கி கிடக்கும் உண்மையை உலகறிய செய்யும் மா உன்னத பணி. திருப்பணி வாழ்க ! வளர்க

அருட்திரு.பேராசிரியர்.மா.தேவராஜ், கூடலூர், நீலகிரி

பத்து அம்ச திட்டமிடல்

1.திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் சங்கத்தின் சார்பில் மாதாந்திர இதழாக கிறிஸ்தவ வரலாற்று சுவடுகள் எனும் மாத இதழ் இணைய பதிவுகளாகவும் ஆகவும் புத்தக வடிவிலும் வெளியிடுவது

2. பழமைவாய்ந்த கிறிஸ்தவ வரலாற்று நூல்களை (சபை வரலாறுகள் கிறிஸ்தவ மிஷன் கிராம உருவாக்க வரலாறுகள் மிஷினரிகளின் வாழ்க்கை வரலாறு கிறிஸ்தவ பாடல்கள் உருவாக்கம் பெற்ற வரலாறுகள் அவற்றை எழுதிய பாடலாசிரியர்களின் வாழ்க்கை வரலாறுகள்) சேகரிப்பது

3. பழமைவாய்ந்த கிறிஸ்தவ வரலாற்று நூல்களை ஸ்கேன் செய்தும் டிஜிட்டல் புத்தகங்களாகவும் செய்தும் பாதுகாப்பது

 

4. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மறுபதிப்பு வெளியிடப்படாத கிறிஸ்தவ மிஷனரிகளின் வாழ்க்கை வரலாறுகளை மறுபதிப்பு செய்வது குறிப்பாக பேராசிரியர் அருள்திரு கிறிஸ்துதாஸ் ஐயர் அவர்களால் வெளியிடப்பட்ட திருநெல்வேலி அப்போஸ்தலர் ரேனியஸ் எனும் நூல் ,சார்ஜெண்ட் அத்தியட்சர் எனும் நூல்,குளோரிந்தா எனும் நூல்

 

5. திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்று சங்கத்திற்கு என ஆண்டு உறுப்பினர்கள் ஆயுட்கால உறுப்பினர்கள், குறுகியகால ஆவணங்களை பார்வையிடும் உறுப்பினர்கள் சேர்ப்பது

 

6. இதுவரை வெளிவராத முக்கியமான மிஷனரிகளின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படங்களை வெளியிடுவது

 

7. மிஷனரிகள் வாழ்ந்த இடங்களையும், மிஷனரிகள் கல்லறைகள் உள்ள இடங்களையும், அவர்களால்

கட்டப்பட்ட தேவாலயங்களையும் இரத்த சாட்சிகள் வாழ்ந்த இடங்கள் இரத்த சாட்சிகளாக அவர்கள் மரித்த இடங்கள் ஆகியவற்றையும் பார்க்க விரும்புகிறவர்களின் வசதிக்காக மிஷன் சுற்றுலா அதில் தங்குமிடங்கள் புறப்பட்டுச் செல்கின்ற வழித்தடங்கள் ஆகியவற்றை சிறப்பாக அமைப்பது

 

8. பராமரிக்கப்படாமல் பாழடைந்த நிலையில் இருக்கிற மிஷனரிகளை நினைவுபடுத்துகிற மிஷனரிகளின் கல்லறைகளை பராமரிப்பது

 

9. திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்று சங்கம் சார்பில் ஆய்வு நூலகம் அமைப்பது அந்த ஆய்வு நூலகத்தில் சிறிய அளவிலான மிஷனரிகளின் உருவச்சிலைகள் கிறிஸ்தவ பாடலாசிரியர்களின் உருவச்சிலைகள் பழமை வாய்ந்த மிஷனரிகளின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் சபை வரலாற்று நூல்கள் கிறிஸ்தவ பாடல்கள் உருவாக்கம் பெற்ற வரலாற்று நூல்கள் பாடலாசிரியர்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள் ஆகியவற்றை சேகரித்து மக்கள் பயன்பாட்டில் வைப்பது மிஷனரிகள் பயன்படுத்திய பொருட்களை சேகரித்து அவற்றை மக்கள் பார்வைக்கு வைப்பது

 

10. திருநெல்வேலி கிறிஸ்தவ வரலாற்று சங்கம் சார்பாக வரலாற்று ஆய்வுக் கருத்தரங்கம் நடத்துவது வரலாற்று கள ஆய்வு பயிற்சிக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவது